மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 2 March 2021 1:13 AM IST (Updated: 2 March 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது.

மும்பை, 

மும்பை பெருநகரில் சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 4½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் ஆட்டோவுக்கு குறைந்தபட்சம் ரூ.18, டாக்சிக்கு ரூ.22 என கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ, டாக்சி கட்டணம் ரூ.3 உயர்த்தப்படுவதாக கடந்த வாரம் அரசு அறிவித்தது.

இதில் டாக்சி குறைந்தபட்ச கட்டணம் (1.5 கி.மீ. தூரம் வரை) ரூ.22-ல் இருந்து ரூ.25 ஆகவும், ஆட்டோ கட்டணம் ரூ.18-ல் இருந்து ரூ.21 ஆக அதிகரிக்கப்பட்டது. 1.5 கி.மீ. பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ஆட்டோவுக்கு ரூ.14.20-ம், டாக்சிக்கு ரூ.16.93-ம் பயணிகள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதேபோல இரவு நேர டாக்சி, ஆட்டோ கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு நேற்று முதல் மும்பை பெருநகரில் அமலுக்கு வந்து உள்ளது. டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் புதிய கட்டணத்திற்கு ஏற்ப வண்டி மீட்டரை மே 31-ந் தேதிக்குள் மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுவரை அவர்கள் பழைய மீட்டரை கணக்கிட்டு புதிய கட்டணத்தின்படி பயணிகளிடம் வாடகை வசூல் செய்து கொள்ளலாம் என வட்டாரப்போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறினார்.


Next Story