புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைப்பு - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. வாக்குப் பட்டியல், வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் விளக்கமளித்துள்ளது.

Related Tags :
Next Story