என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் - பாஜகவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் பேட்டி


என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் - பாஜகவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2021 5:01 PM IST (Updated: 3 March 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என நிர்மல் குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியை சந்தித்து, பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங். விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில்,  என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்த பின் புதுச்சேரி பாஜகவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் தான் உள்ளோம் என்றார்.


Next Story