கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்


கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 3 March 2021 5:55 PM IST (Updated: 3 March 2021 5:55 PM IST)
t-max-icont-min-icon

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இதன் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளில் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது கட்டத்தின் 2-வது நாளான நேற்று மூத்த மத்திய மந்திரிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

Next Story