மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 1.16 கோடி வசூல்
மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 13 நாள்களில் ரூ. 1.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,
கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி முதல் நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் தீவிரமாக பரவியது. நாட்டில் அதிகபட்சமாக மும்பையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனை குறைக்கும் வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசம் அணியாத 58,000 பேரிடமிருந்து கடந்த 13 நாள்களில் அபராதமாக ரூ. 1.16 கோடி காவல்துறை சார்பில் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து தினமும் (12,000 ஆயிரம் பேர்) அபராதம் வசூலிக்குமாறு மும்பை போலீஸ் கமிஷ்னர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story