மொராக்கோ நாட்டிற்கான இந்திய தூதராக ராஜேஷ் வைஷ்ணவ் நியமனம்
மொராக்கோ நாட்டிற்கான இந்திய தூதராக ராஜேஷ் வைஷ்ணவ் நியமனமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொராக்கோ நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக ராஜேஷ் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாக நியமனம் பெற்ற ராஜேஷ் வைஷ்ணவ், தற்போது மால்டா நாட்டிற்கான இந்திய உயர் ஆணையராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து தனது புதிய பணி நியமனத்தை ராஜேஷ் வைஷ்ணவ் விரைவில் ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவுடன், நீண்ட காலமாக இந்தியா நல்லுறவை பேணி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தொழில்முறை ஒப்பந்தகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தியா-மொராக்கோ இடையிலான உறவு மேம்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story