விவசாய உற்பத்தி பொருள் விற்பனையை ஊக்குவிக்கவே புதிய வேளாண் சட்டங்கள்; மத்திய மந்திரி தோமர்


விவசாய உற்பத்தி பொருள் விற்பனையை ஊக்குவிக்கவே புதிய வேளாண் சட்டங்கள்; மத்திய மந்திரி தோமர்
x
தினத்தந்தி 5 March 2021 5:24 AM IST (Updated: 5 March 2021 5:24 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான விற்பனையை ஊக்குவிக்கவே புதிய வேளாண் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என மத்திய மந்திரி தோமர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதியில் இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.  இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்நிலையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனையை ஊக்குவிக்கவே நாங்கள் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

நல்ல பலன்களை அளிக்க கூடிய பயிர்களை வளர்ப்பதற்கு அவை விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.  வேளாண் சட்டங்கள் விவசாயத்தில் புரட்சிக்கான மாற்றங்களை கொண்டு வரும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story