தொடரை மிஞ்சும் வீடியோ காட்சிகள் : காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்திய கணவனை அடித்து உதைத்த மனைவி
காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்திய கணவனை அடித்து உதைத்த மனைவி தொடரை மிஞ்சும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
ஐதராபாத்
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி மாவட்டம் கொத்தகுடாம் பகுதியை சேர்ந்தவர் கேபிள் ஆபரேட்டர் ராஜுபாய் 13 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூபாய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருந்தாலும் மனைவி வீட்டில் இருந்து, திருமணத்தின் போது, பங்களாவீடும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் வரதட்சணையாக பெற்று கொண்டார். இந்த தம்பதியினருக்கு பதினோரு வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்தில் இருந்து ராஜூபாய்,வீட்டுக்கு சரிவர வருவது இல்லை. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜூபாய் மனைவியுடன் சண்டையிட்டு கோபித்துகொண்டு செல்வது வழக்கம்.
இவ்வாறு செல்லும் ராஜுபாய் அதே பகுதியில் ஒரு திருமணமாகாத இளம்பெண்ணுடன் வீடு எடுத்து ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விவரம் மனைவிக்கு தெரியவந்ததால் உறவினர்களுடன் வீட்டுக்குள் புகுந்து கணவனையும் அவரது காதலியையும் அடித்து துவைத்து உள்ளனர்.
உடனடியாக இருவரையும் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச்சென்று போலீசில் ஒப்படைத்தனர்.
தொடரை மிஞ்சும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
Related Tags :
Next Story