வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியது


வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியது
x
தினத்தந்தி 5 March 2021 8:58 AM GMT (Updated: 5 March 2021 8:58 AM GMT)

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது.

புதுடெல்லி,

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு  விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

விவசாயிகள் அனைவரும் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர் விவசாயிகள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடும், குளிர், மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்ட களத்தில் இருந்து திரும்புவோம் என்று விவசாயிகள்  கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. போராட்டக் களத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.


Next Story