மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் - 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டி


மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் - 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டி
x
தினத்தந்தி 5 March 2021 3:42 PM IST (Updated: 5 March 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காள சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது என அக்க்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா:-

மேற்குவங்காளத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது.  இறுதிகட்டமான 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்குவங்காள சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 291 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். இத்தொகுதிகளில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலையும் மம்தா வெளியிட்டுள்ளார். இதில் 50 வேட்பாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடாத எஞ்சிய 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி, தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்காக வரும் 9-ம் தேதி நந்திகிராம் செல்லும் மம்தா அத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை 10-ம் தேதி தாக்கல் செய்கிறார்.

Next Story