மகளிர் தினத்தில் பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி


மகளிர் தினத்தில் பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 5 March 2021 3:58 PM IST (Updated: 5 March 2021 3:58 PM IST)
t-max-icont-min-icon

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி ஆந்திர அரசு பெண்களுக்கு மொபைல்கள் வாங்க 10% தள்ளுபடியை அம்மாநில அரசு அறிவித்தது.

ஐதராபாத், 

வரும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆந்திராவில் பெண்கள் பாதுகாப்பு “ஆஃப்”பான திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 8ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 8 ஆம் தேதி அனைத்து பெண்கள் காவல்துறையினருக்கும் விடுமுறை வழங்குவதோடு, அந்த நாளைக் குறிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளையும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும் மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் நடத்தவும், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Next Story