சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லா வழக்கு


சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லா வழக்கு
x
தினத்தந்தி 6 March 2021 4:43 AM IST (Updated: 6 March 2021 4:43 AM IST)
t-max-icont-min-icon

சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்துகளை கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. அந்த சொத்துகள், காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் தொடர்பான ஊழலில் சம்பாதித்த சொத்துகள் என்று கூறி, இந்த நடவடிக்கையை எடுத்தது.

இந்தநிலையில், சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் ஐகோர்ட்டில் பரூக் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளார். இத்தகவலை தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஹஸ்னைன் மசூடி, ‘‘அந்த சொத்துகள், பரம்பரை சொத்துகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழல் புகார் எழுவதற்கு முன்பே வாங்கப்பட்ட சொத்துகள் ஆகும்’’ என்று கூறினார்.

Next Story