மேற்குவங்காள தேர்தல்: மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டி ஏன்...?
மேற்குவங்காள தேர்தல்: நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடியுமா...? என பாஜகவின் சவாலை ஏற்று தற்போது அங்கு மம்தாபானர்ஜி போட்டியிடுகிறார்
கொல்கத்தா
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக வருகிற 27ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 29ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 291 பேர் கொண்ட பட்டியலை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். அதில், நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட மம்தா முடிவு செய்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டில் இருந்து மம்தா பானர்ஜி, நடப்பு பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.மாநில மின்சார துறை மந்திரி சோவந்தேப் சட்டோபாத்யாய் தற்போது பவானிபூரில் போட்டியிடுகிறார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறும் போது “தேவைப்பட்டால் நான் மீண்டும் பவானிபூர் போட்டியிடுவேன். ஆனால் நான் இங்கு போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும், பவானிபூர் எப்போதும் என் சொந்த்க தொகுதியாக இருக்கும். நான் எப்போதும் இந்த் தொகுதியில் இருப்பேன், தொகுதியை கண்காணிப்பேன்."
30 ஆண்டுகளுக்கு முன்னர் 1991 ல் காங்கிரஸ் பேரணியை வழிநடத்தியபோது ஹஸ்ரா கிராசிங்கில் தாக்கப்பட்டேன்எனது தலையில் எலும்பு முறிந்தது. நான் காயமடைந்து பிரச்சாரம் செய்தேன். மக்கள் எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். இங்கிருந்து எட்டு தேர்தல்களில் நான் போராடி வெற்றி பெற்று உள்ளேன் என கூறினார்.
இந்த தொகுதியில் இருந்து மம்தா பானர்ஜி நதிகிராம் தொகுதிக்கு மாறி உள்ளார். பவானிபூர் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 சதவீதம் பெங்காலிஅல்லாத மக்களைக் கொண்டுள்ளனர். மாறிவரும் மக்கள்தொகை 2014 மக்களவைத் தேர்தலில் இருந்து பாஜகவு ஆதரவாக மாற தொடங்கி உள்ளது.
2011-2014 முதல் மூன்று ஆண்டு கட்டத்தில், பாஜகவின் வாக்குகள் 5,078 முதல் 47,465 ஆக உயர்ந்துள்ளன. 2011 இடைத்தேர்தலலில் , அவர் 77% வாக்குகளைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டில், இது சுமார் 48% ஆக குறைந்தது. 2019 எல்.எஸ் தேர்தலில், டி.எம்.சி 3,168 வாக்குகள் மட்டுமே முன்னிலை வகித்தது.
இதனால் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சவாலை ஏற்று தாம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார் முதல் மந்திரி மம்தா பானர்ஜி.
நந்திகிராமில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மம்தா பானர்ஜி நந்திகிராம் தனது இதயத்துக்கு நெருக்கமான தொகுதி என்று குறிப்பிட்டார்.
மம்தா மார்ச் 9 ஆம் தேதி நந்திகிராமிற்கு வருகிறார் மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு ஹால்டியா எஸ்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நந்திகிராம் தொகுதியில் உள்ள 2.1 லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் சிறுபான்மையினராக உள்ளனர்.
சுவெந்து அதிகாரியின் விலகலை ஈடுசெய்ய நந்திகிராமில் இருந்து போட்டியிட மம்தா எடுத்த முடிவு ஒரு மூலோபாய நடவடிக்கை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சுவேந்து அதிகாரி அவர் விலகிவிட்டதால், கட்சியினர் திசையற்றவர்களாகிவிட்டனர். முதல்வரின் முடிவு ஒரு தைரியமான நடவடிக்கை ”என்று ஒரு அரசியல் ஆய்வாளர் கூறினார்.
Related Tags :
Next Story