உத்தரபிரதேசத்தில் 27 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் - யோகி ஆதித்நாத்


உத்தரபிரதேசத்தில் 27 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் - யோகி ஆதித்நாத்
x
தினத்தந்தி 6 March 2021 4:39 PM IST (Updated: 6 March 2021 4:39 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 27 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்நாத் திறந்து வைத்தார்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,920 கோடி செலவில் 27 துணை மின் நிலையங்களைக் காணொலிக் காட்சி மூலம் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்நாத் திறந்து வைத்தார்.

விழாவில் உத்தரப் பிரதேச எரிசக்தித் துறையை வாழ்த்தி பேசி அவர், சிறந்த பணி கலாசாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் சாமானிய மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மின் நிறுவனம் செய்து வருகின்றது.

மேலும், மாநில விவசாயிகளுக்கு மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், இது விவசாய செலவைக் குறைக்கவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விழாவில் துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் உ.பி. மின்சாரத்துறை மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story