தேசிய செய்திகள்

பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள்: திருமண நாளில் உயிரிழந்த பரிதாபம் + "||" + Bride suffers heart attack due to excessive crying during 'bidaai' in Odisha's Sonepur, dies

பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள்: திருமண நாளில் உயிரிழந்த பரிதாபம்

பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள்: திருமண நாளில் உயிரிழந்த பரிதாபம்
திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஷ்வர்,

ஒரிசா மாநிலத்தில் சோனேபூர் என்ற பகுதியில் குப்தேஸ்வரி என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புடை சூழ இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் கணவருடன் செல்லும் முன் பெற்றோரிடம் இருந்து விடைபெறும் போது அளவுக்கு அதிகமாக மணமகள் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருமணமாகி ஒரு சில மணி நேரத்தில் பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் அழுத மணமகள் பரிதாபமாக உயிரிழந்தது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.