டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் திறப்பு


டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் திறப்பு
x
தினத்தந்தி 7 March 2021 1:44 AM IST (Updated: 7 March 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில் மத்திய சிறை தொழிற்சாலை பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது.  டெல்லி சிறை துறையின் உபபிரிவில் ஒன்றாக செயல்படும் இதில், பல்வேறு யூனிட்களில் 400 சிறை கைதிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.  இதனால் கைதிகள் பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.  விடுதலையான பின்னர் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறை எண் 5ல் உள்ள 18 முதல் 21 வயதுடைய கைதிகள் தொழில்முறை பயிற்சி பெற்று வருகின்றனர்.  இதுபற்றி திகார் சிறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குளியல் சோப்பு, சலவை சோப்பு, டிடெர்ஜெண்ட், ஊதுபத்தி, கை கழுவும் திரவம் உள்ளிட்டவை சிறைகைதிகளால் தயாரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் டெல்லி பொது இயக்குனர் (சிறைகள்) கோயெல், டி.ஐ.ஜி. (சிறைகள்) சோப்ரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டதுடன், அதிகாரிகள் மற்றும் கைதிகள் பெண்களை மதிக்க உறுதிமொழி ஒன்றும் எடுத்து கொண்டனர்.

Next Story