மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் அவரது முன்னாள் உதவியாளர் போட்டி


மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் அவரது முன்னாள் உதவியாளர் போட்டி
x
தினத்தந்தி 7 March 2021 2:47 AM IST (Updated: 7 March 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க.வில் இணைந்த அவரது முன்னாள் உதவியாளர் போட்டியிடுகிறார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 291 பேர் கொண்ட பட்டியலை முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.  அதில், நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட மம்தா முடிவு செய்துள்ளார்.  கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 57 பேர் கொண்ட பட்டியல் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.  இதில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக, அவரது கட்சியில் இருந்து கடந்த நவம்பர் இறுதியில் விலகி, பா.ஜ.க.வில் இணைந்த மம்தாவின் முன்னாள் உதவியாளரான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இதுபற்றி சுவேந்து அதிகாரி கொல்கத்தா நகரில் பெஹலா பகுதியில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, நீண்ட காலம் இருந்த பவானிபூர் தொகுதியை விட்டு ஏன் மம்தா பானர்ஜி ஓடுகிறார்?

ஏனெனில், கடந்த 2019 மக்களவை தேர்தலில் மித்ரா பகுதியில் உள்ள பூத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.  உங்களுடைய சொந்த பகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியவில்லை என கூறிய அதிகாரி, நந்திகிராம் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியாள் என மம்தாவை குறிப்பிட்டு அவரை அழகாக தோற்கடிப்பேன் என 200 சதவீதம் உறுதியுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Next Story