சூடுபிடிக்கிறது, மேற்கு வங்காள தேர்தல்களம் மம்தாவின் சவாலை ஏற்றார், சுவெந்து அதிகாரி நந்திகிராமில் களம் இறங்குகிறார்


சூடுபிடிக்கிறது, மேற்கு வங்காள தேர்தல்களம் மம்தாவின் சவாலை ஏற்றார், சுவெந்து அதிகாரி நந்திகிராமில் களம் இறங்குகிறார்
x
தினத்தந்தி 7 March 2021 3:57 AM IST (Updated: 7 March 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

நந்திகிராமில் போட்டியிடுவதாக மம்தா அறிவிவித்துள்ளார். பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள சுவெந்து அதிகாரி, மம்தாவின் சவாலை ஏற்று, அவரை எதிர்த்து களம் காணுகிறார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி மம்தா இந்த முறை தனது பவானிபூர் தொகுதியில் போட்டியிடவில்லை.

தனது கட்சித்தலைவர்களில் ஒருவராகவும், மாநில போக்குவரத்து மந்திரியாகவும் இருந்து விட்டு பா.ஜ.க.வுக்கு தாவிய சுவெந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று மம்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படியே நேற்று முன்தினம் அவர், நந்திகிராமில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இது பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள சுவெந்து அதிகாரிக்கு மம்தா விடுத்த சவாலாக அமைந்துள்ளது. இந்த சவாலை அவரும் ஏற்றுக்கொண்டு விட்டார்.

இது குறித்து சுவெந்து அதிகாரி நேற்று கூறியதாவது:-

நந்திகிராமில் போட்டியிடும் அவரது (மம்தா) முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அவர் தனது அறிவிப்பில் உறுதியாக இருக்க வேண்டும். நாங்கள் தேர்தலில் அவரது தோல்வியை உறுதி செய்வோம்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை நான் உறுதி செய்வேன். மே 2-ந் தேதி நடைபெறுகிற வாக்கு எண்ணிக்கையின்போது, திரிணாமுல் காங்கிரசின் தோல்வியையும், பா.ஜ.க.வின் வெற்றியையும் உறுதி செய்வேன்.

மெதினிபூர் மாவட்டம், வெல்ல முடியாதது. இங்குள்ள வாக்காளர்கள் தங்கள் சொந்த வேட்பாளரை விரும்புகிறார்களே ஒழிய வெளியூர்காரரை அல்ல. (கொல்கத்தாவாசியான மம்தாவைத்தான் வெளியூர்காரர் என குறிப்பிட்டுள்ளார்).

நந்திகிராமில் என்னை வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்த உடன் மக்களை சந்திக்க மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்வேன். மம்தா பானர்ஜி வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு வங்காள தேர்தல் களம் சூடுபிடித்து வருகிற நிலையில், மம்தாவும், சுவெந்து அதிகாரியும் நேரடி போட்டியில் இறங்குகிறபோது அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story