மதுபான கடைகளுக்கு கடவுள் பெயர் வைப்பதற்கு தடை விதிக்க சிவசேனா எம்.எல்.சி. கோரிக்கை


மதுபான கடைகளுக்கு கடவுள் பெயர் வைப்பதற்கு தடை விதிக்க சிவசேனா எம்.எல்.சி. கோரிக்கை
x
தினத்தந்தி 7 March 2021 5:10 AM IST (Updated: 7 March 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

மதுபான கடைகளுக்கு கடவுள் பெயர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவசேனா எம்.எல்.சி. கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை, 

சிவசேனா எம்.எல்.சி. மனிஷா காயன்டே மராட்டிய மேல்-சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் அவர், மதுபானக்கடைகள், பீர் பார்களுக்கு கடவுள், புனிதர்கள், அறிஞர்கள், தேசிய தலைவர்களின் பெயரை வைக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

இதன் மீதான விவாதம் அடுத்த கூட்டத் தொடரில் நடைபெறும் என மனிஷா காயன்டே தெரிவித்தார்.

Next Story