தேசிய செய்திகள்

தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு + "||" + Enforcement is working against the election rules

தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை  செயல்படுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
பெரும்பாவூர், 

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அமலாக்கத்துறையினர் தேர்தல் விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு புகார் கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிபி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அமலாக்கத்துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 20-ந்தேதி பதவி ஏற்கிறார்
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.
2. கேரளாவில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை - பினராயி விஜயன்
கேரளாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்: பினராயி விஜயன் நம்பிக்கை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
5. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கர்நாடகா கட்டுப்பாடு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பது தொடர்பாக பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.