தேசிய செய்திகள்

உயரதிகாரிகள் நேரத்தை மாற்றி கொடுக்க மறுப்பு: கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பெண் காவலர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் + "||" + Chandigarh Traffic Constable with Baby Leaves Netizens Demanding Free Daycare for Cops

உயரதிகாரிகள் நேரத்தை மாற்றி கொடுக்க மறுப்பு: கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பெண் காவலர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

உயரதிகாரிகள் நேரத்தை மாற்றி கொடுக்க மறுப்பு: கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பெண் காவலர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
சண்டிகரை சேர்ந்த ஒரு பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


சண்டிகர் நகர் போக்குவரத்து காவல்பிரிவில் பணிபுரிபவர் பிரியங்கா. இவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.  இவரது உயரதிகாரிகள் காலை 8 மணி முதல் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு இவருக்கு அந்த பணியை ஒதுக்கியுள்ளனர். 

ஆனால் இவர் கைக்குழந்தையைக் கவனிக்க வேண்டி உள்ளதால் காலை நேரத்தில் பணிக்கு வரமுடியாது என்றும் நேரத்தை மாற்றிக் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். ஆனால் அவரை கட்டாயம் பணிக்கு வருமாறு உயரதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனவே பிரியங்கா தனது கைக்குழந்தையை எடுத்துச் சென்று குழந்தையுடன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு இருந்து வீடியோவாக ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்ய அது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை கண்ட சில சமூகதளவாசிகள் அந்த பெண்ணின் கடமை உணர்வைப் பாராட்டினர்/ அதே வேளையில் பலர் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஒரு பெண் காவலரைப் பணிபுரிய வைத்த உயரதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.