திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்குவங்காள மக்களிடம் கொள்ளையடிக்கிறது - பிரதமர் மோடி தாக்கு


திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்குவங்காள மக்களிடம் கொள்ளையடிக்கிறது - பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 7 March 2021 4:57 PM IST (Updated: 7 March 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்கு வங்காள மக்களிடம் கொள்ளையடிப்பதாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக-வுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். 

பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

திரிணாமுல் காங்கிரஸ் தாய், தாய் மண், மக்கள் ஆகியவற்கிற்காக செயல்படுவோம் என உறுதியளித்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்களா?

தாய், தாய் மண், மக்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள். தாய்மார்கள் தெருக்களிலும், வீடுகளிலும் தாக்கப்படுகிறார்கள். சமீபத்தில் 80 வயது தாயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதன் கொடூர முகத்தை (தன்மையை) ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியப்படுத்தியுள்ளது.

மேற்குவங்காள மக்கள் உங்களை (மம்தா பானர்ஜி) ’அக்கா’ என தேர்ந்தெடுத்தனர். ஆனால் நீங்கள் ஏன் மருமகனின் அத்தையாகவே இருக்கிறீர்கள்? இந்த ஒற்றை கேள்வியை தான் மேற்குவங்காள மக்கள் உங்களிடம் கேட்கின்றனர். 

அவர்கள் (மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு) மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் எண்ணற்ற ஊழல் செய்துள்ளனர். மேலும், அவர்கள் மேற்குவங்காள மக்களிடம் கொள்ளையடிக்கின்றனர். அம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்ட புயல் நிவாரண நிதியையும் அவர்கள் கொள்ளையடுத்துள்ளனர். 

நீங்கள் (மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு) நிறைய ஊழல் செய்துள்ளீர்கள். ‘ஊழல் ஒலிம்பிக்’ விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்யும் அளவிற்கு ஊழல் செய்துள்ளீர்கள். நீங்கள் (மம்தா பானர்ஜி அரசு) மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளீர்கள்.

நீங்கள் (மம்தா பானர்ஜி) வங்காளத்தை வளர்ச்சிக்கு பதிலாக பிரிவினை நோக்கி தள்ளுகிறீர்கள். ஆகையால், தாமரை மலரும். நீங்கள் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கிறீர்கள். ஆகையால், தாமரை மலர்கிறது.

என்றார். 

Next Story