ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள், அவர்களுக்காகதான் உழைக்கிறேன் - பிரதமர் மோடி


ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள், அவர்களுக்காகதான் உழைக்கிறேன் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 March 2021 5:32 PM IST (Updated: 7 March 2021 5:32 PM IST)
t-max-icont-min-icon

ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள், அவர்களுக்காகதான் உழைக்கிறேன் என கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக, மற்றும் இடதுசாரிகள் - காங்கிரஸ் - இந்திய மதசார்பற்ற முன்னணி கூட்டணி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக-வுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். 

பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

’நான் எனது நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிகிறன. நாம் யாருடன் வளர்ந்தோமோ அவர்கள் தான் நமது நண்பர்கள். நான் வறுமையில் வளர்ந்தேன். ஆகையால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்துவரும் ஏழைகளின் நிலையை நான் அறிவேன். ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். எனது நண்பர்களான அவர்களுக்காகதான் நான் உழைக்கிறேன். தொடர்ந்து உழைப்பேன்’ என்றார்.

Next Story