கேரளாவில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நடிகர் தேவன்
பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் தேவன் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
திருவனந்தபுரம்,
உள்துறை மந்திரி அமித்ஷா நாகர்கோவிலில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அதன் பின்னர் கேரளா சென்றார். திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது பிரபல மலையாள நடிகர் தேவன் பாஜகவில் இணைந்தார்.
நடிகர் ரஜினியின் பாட்ஷா உள்பட பல தமிழ் படங்களிலும், மலையாள தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் தேவன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் அவரை வரவேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்தினார்.
நடிகர் தேவன் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story