ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்; போலீசார் விசாரணை


ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 March 2021 6:27 AM IST (Updated: 8 March 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் பள்ளி கூடமொன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் சரஸ்வதி விஹார் காலனி என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  வர்த்தக பாட ஆசிரியர் சச்சின் தியாகி என்பவர் பாடங்களை எடுத்து முடித்து விட்டு தனது வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவரை பின்தொடர்ந்த மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த அவர் தப்பி விட்டார்.  வகுப்பில் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதற்காக அவர் சுடப்பட்டு உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, சி.சி.டி.வி. கேமிரா உதவியால் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் 4 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.  விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.

அவர்களுடைய மொபைல் போனையும் கண்காணித்து வருகின்றனர்.  அந்த மாணவர்கள் மீது ஆசிரியர் அளித்த புகாரின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story