பெண் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை; மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா அரசு அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஊழியர்களுக்கு தெலுங்கானாவில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தெலங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட அறிவிப்பில், “ஆண்களுடன் அனைத்து துறையிலும், பெண்கள் போட்டி போடுகின்றனர்; சிறந்தும் விளங்குகின்றனர். மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள், வாய்ப்பு வழங்கப்பட்டால் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story