தேசிய செய்திகள்

3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை + "||" + President Ramnath Govind to visit Tamil Nadu tomorrow for a 3 day tour

3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை

3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை
3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை 9-ம் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக்கொண்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

10-ந்தேதி(புதன்கிழமை) காலை கவா்னா் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டு செல்கிறாா். வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன்பின்பு தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்கிறாா். மாலையில் வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, காரில் கவா்னா் மாளிகை சென்று தங்குகிறார்.

11-ந் தேதி(வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

ஜனாதிபதி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா். அவர்கள், சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதியின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்.

அதைதொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதியின் 3 நாள் பயணத்தின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதியின் பாதுகாப்புபடை உயா் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வருகிற 11-ந்தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களை தேடி மருத்துவம் திட்டம்; நாளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
3. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
தமிழக சட்டசபையில் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
4. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சியின் முழு விவரம்
தமிழக சட்டசபையில் வருகிற 2-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் முழு விவரம் வெளியாகியுள்ளது.
5. ஜம்மு காஷ்மீர், லடாக்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணம்
கார்கில் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மரியாதை செலுத்துகிறார்.