மகளிர் தினத்தையொட்டி சட்டசபைக்கு குதிரையில் வந்த பெண் எம்எல்ஏ
இன்று உலக மகளிர் தினத்தையொட்டி சட்டசபைக்கு பெண் எம்எல்ஏ ஒருவர் குதிரையில் வந்தார்.
ராஞ்சி
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் நாளையொட்டி ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்பா பிரசாத் குதிரையில் சட்டமன்றத்துக்கு வந்தார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பார்காகோன் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அம்பா பிரசாத். சட்டப்பேரவையிலேயே இளம் வயது உறுப்பினரான அவர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவைக்குக் குதிரை மீது அமர்ந்து வந்தார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ரவி ரத்தோர் உலக மகளிர் நாளையொட்டித் தனக்கு இந்தக் குதிரையைப் பரிசளித்ததாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story