நாளை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம் போல் கூடுகிறது
நாளை (08-ம் தேதி) முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம்போல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டி 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது. முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (8-ம் தேதி) மீண்டும் கூடியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு முன்பு பின்பற்றிய நேரப்படி, நாளை (08-ம் தேதி) முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம்போல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக மக்களவை, மாநிலங்களவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு கூடியது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) (08-ம் தேதி) முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை, கொரோனாவுக்கு முந்தைய நேரமான காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story