ரெயில் பயணிகளுக்காக அவசர 'ஹெல்ப்லைன்' எண் அறிமுகம்


ரெயில் பயணிகளுக்காக அவசர ஹெல்ப்லைன் எண் அறிமுகம்
x
தினத்தந்தி 9 March 2021 4:50 AM IST (Updated: 9 March 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணிகளுக்காக '139' என்ற ஒருங்கிணைந்த, 'ஹெல்ப்லைன்' எண் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் தங்களுக்கு உள்ள குறை மற்றும் புகார்களை ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்காகவும், பல்வேறு ஹெல்ப்லைன் எண்கள் உள்ளன.

இதனால் சரியான எண்ணை கண்டறிந்து தொடர்புகொள்ள இயலாமல பயணியர் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். 

இந்நிலையில் அந்த கவலையை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த, ஹெல்ப்லைன் எண் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அனைத்து விதமான சேவைகளையும் பெறமுடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள 182 என்ற ஹெல்ப்லைன் எண் வரும் ஏப்ரல் 1ம் தேதி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, புதிய ஹெல்ப்லைன் எண், 12 மொழிகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த எண்ணை தொடர்புகொள்ள 'ஸ்மார்ட் போன்' அவசியம் கிடையாது. அனைத்து விதமான மொபைல் போன்களில் இருந்தும் இந்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story