ஆந்திர பிரதேசத்தில் 6 எம்.எல்.சி. பதவிகளுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்வு
ஆந்திர பிரதேசத்தில் காலியான 6 எம்.எல்.சி. பதவிகளுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் காலியான 6 எம்.எல்.சி. பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பதவிகளுக்கு விண்ணப்பித்தனர். அவர்களை தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
இதன் முடிவுகளை தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதில், காலியான 6 எம்.எல்.சி. பதவிகளுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, பல்லி கல்யாண சக்ரவர்த்தி, முகமது கரீமுன்னிசா, சி. ராமசந்திரைய்யா, துவ்வடா சீனிவாஸ், ஷேக் முகமது இக்பால் மற்றும் சல்லா பாகீரத ரெட்டி ஆகியோர் புதிய எம்.எல்.சி.க்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story