அமித்ஷாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: பினராயி விஜயன் பதிலடி
கேரள சட்டமன்றத்துக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
திருவனந்தபுரம்,
தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனை உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:
அமித்ஷாவிடம் இருந்து நான் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவின் பங்கு என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். நான் ஒரு போதும் பல மாதங்கள் சிறைவாசம் இருந்ததில்லை.
அற்பமான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முன்பாக தங்களின் கடந்த காலங்களையும் அவர்கள் பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சர் விரும்பத்தகாத மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை கூறி மாநிலத்தை அவமதித்து விட்டார். அவரது பிரிவினைவாத கொள்கை கேரளாவில் பலிக்காது” என்றார்.
Related Tags :
Next Story