இன்று முதல் வழக்கமான நேரத்தில் பாராளுமன்றம் கூடுகிறது


இன்று முதல் வழக்கமான நேரத்தில் பாராளுமன்றம் கூடுகிறது
x
தினத்தந்தி 9 March 2021 11:00 AM IST (Updated: 9 March 2021 11:00 AM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்றம் இன்று முதல் வழக்கமான நேரத்தில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இதன்படி 2-வது அமர்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் இருந்ததால் இதுவரை நாடாளுமன்றம் இருவேறு அமர்வுகளாக நடத்தப்பட்டு வந்தது. காலையில் மாநிலங்களவையும், பிறபகலில் மக்களவையும் நடைபெற்று வந்தன. 

இந்தநி்லையில் நாடாளுமன்றத்தை வழக்கம்போல் காலையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி.க்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, இதனால் இன்று  முதல் மாநிலங்களவை காலை 11 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிவரை நடக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். மக்களவையும் இதேபோன்று காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது. 

Next Story