பாஜகவில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறிய ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு ஜோதிராதித்ய சிந்தியா பதில்
டெல்லியில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிந்தியாவின் விலகல் குறித்து பேசினார்.
புதுடெல்லி,
ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், மத்திய பிரதேசத்தின் முன்னணி தலைவருமாக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமானார்.
இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசமைத்தது. தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிந்தியாவின் விலகல் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், ‘ஜோதிராதித்ய சிந்தியா ஒருநாள் நிச்சயம் முதல்-மந்தியாக இருப்பார் என அவரிடம் நான் தெரிவித்தேன். ஆனால் அவர் வேறொரு பாதையை தேர்ந்தெடுத்தார். அவர் காங்கிரசில் நீடித்திருந்தால் முதல்-மந்திரி ஆகியிருப்பார். ஆனால் இன்று பா.ஜனதாவில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அங்கு அவர் ஒருபோதும் முதல்-மந்திரி ஆகமாட்டார்’ என்று குறிப்பிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே காங்கிரசின் இளைய தலைவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும், அவர்களது செயல்பாடுகளை கட்சித்தலைமை கவனித்தே வருவதாகவும் தெரிவித்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா பதில்
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, ராகுல் காந்தி தற்போது கொண்டிருக்கும் அக்கறை நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது கொண்டிருப்பாரேயானால் சூழல் வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story