இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம்; தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா
இந்திய விவசாயிகள் போராடடம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதத்திற்கு இங்கிலாந்து தூதரை அழைத்து இந்தியாகண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தினர். இந்த கூட்டம் லண்டனில் உள்ள இந்திய தூதரக வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடைபெற்றது.
இதில் 18 இங்கிலாந்து எம்.பி.க்கள் கலந்து கொண்டனர் அதில் 17 பேர் இந்திய அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினையை கையாள்வதையும், பத்திரிகை சுதந்திரத்தையும் தாக்கி பேசினர்.
விவாதத்தின் போது, தொழிற்கட்சி மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் விவசாயிகளை இந்தியா எதிர்ப்பாளர்களைப்போல் நடத்தியதற்காகவும், பத்திரிகைகள் மீது ஒடுக்குமுறை செய்ததாகவும், இணையம் நிறுத்தப்படுவதாகவும், ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதரை அழைத்து இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரிடம் , இதுபோன்ற கலந்துரையாடல் மற்றொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் தலையிடுவதை குறிக்கும் என கூறினார்.
இங்கிலாந்து எம்.பி.க்கள் இந்தியாவில் நடைபெறும் விவசயிகள் போராட்டங்களை தவறாக சித்தரிப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார் என மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story