மும்பை தாராவியில் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மும்பையில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 3 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மேலும் மும்பையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 686 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா தொற்று இரட்டிப்பாகும் காலம் 49 நாளாக உள்ளது. இதைத்தவிர மும்பையில் கட்டுப்பாட்டு பகுதிகளாக 72 இடங்களும், 616 கட்டிடங்களும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இதேபோல ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 914 ஆக உயர்ந்தது. தாதரில் புதிதாக 60 பேருக்கும், மாகிமில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story