வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுகு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்


வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுகு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
x
தினத்தந்தி 1 April 2021 2:40 AM IST (Updated: 1 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற புதிய கட்டுப்பாடு இன்று (வியாழக்கிழமை) அமலுக்கு வருகிறது.

பெங்களூரு: வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற புதிய கட்டுப்பாடு இன்று (வியாழக்கிழமை) அமலுக்கு வருகிறது.

புதிய வழிகாட்டுதல்

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கர்நாடக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்கள் 1-ந் தேதி (அதாவது இன்று) முதல் கட்டாயம் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுகாதாரத்துறையின் இந்த புதிய வழிகாட்டுதல் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இனி தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, வைரஸ் பாதிப்பு இல்லை என்றால் அந்த "நெகட்டிவ்" சான்றிதழை கொண்டுவர வேண்டும்.

கொரோனா பரிசோதனை

பெங்களூருவுக்குள் நுழையும் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி கொரோனா பரிசோதனை சான்றிதழை ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த வழிகாட்டுதல் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து சுகாதாரத்துறை இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது நடைமுறைக்கு வந்த பிறகே அந்த வழிகாட்டுதல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தெரியவரும்.

Next Story