மேற்கு வங்காளம், அசாமில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்


மேற்கு வங்காளம், அசாமில்  இன்று இரண்டாம் கட்ட தேர்தல்
x
தினத்தந்தி 1 April 2021 3:43 AM IST (Updated: 1 April 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் இன்று 2- ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

 
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்தநிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று (வியாழக்கிழமை) 30 தொகுதிகளில் நடக்கிறது. அவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அங்கு அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். 

இவர், சில மாதங்களுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிபா.ஜனதாவில் சேர்ந்தார். நந்திகிராம் உள்பட 30 தொகுதிகளில் நேற்று முன் தினம் மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதற்கு முன்பாக, நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதாவின் பலத்தை காண்பிக்கும்வகையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார்.

அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் இன்று  2- ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் 39 தொகுதிகளில்  தேர்தல் நடக்கிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 


Next Story