விதிகளுக்கு மாறாக 2 மாத கைக்குழந்தைக்கு கொரோனா பரிசோதனை


விதிகளுக்கு மாறாக 2 மாத கைக்குழந்தைக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 1 April 2021 12:18 AM GMT (Updated: 1 April 2021 12:18 AM GMT)

2 மாத கைக்குழந்தைக்கு ஆர்.டி. -பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

மங்களூரு, 

கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் உள்ள தனியார் ஆய்வுக்கூடத்தில் 2 மாத கைக்குழந்தைக்கு ஆர்.டி. -பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழந்தையின் குடும்பம், அபுதாபியில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தபோது இந்த சோதனை நடத்தப்பட்டது. 

இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, தனியார் ஆய்வகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். இதுகுறித்து கொரோனா சிறப்பு அதிகாரி டாக்டர் அசோக் கூறுகையில், ‘‘2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் கொரோனா சோதனை நடத்தக்கூடாது என்பது விதிமுறை ஆகும். 

இது தெரியாமல் விமான நிலைய அதிகாரிகள், 2 மாத கைக்குழந்தைக்கு கொரோனா சோதனை நடத்தி உள்ளனர். அவர்களிடம், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சோதனை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினேன்’’ என்றார்.

Next Story