3.30 மணி நிலவரம்: மேற்கு வங்காளத்தில் 71.07% அசாமில் 63.03% % வாக்குப்பதிவு
மேற்கு வங்காளத்தில் 3.30 மணி நிலவரப்படி 71.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 63.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கவுகாத்தி
மேற்கு வங்காளத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
முதல்வர் மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும் பலப் பரீட்சை நடத்தும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கு மெதினிபூர் மாவட்டத்தில் காரக்பூர் சாதர் தொகுதியில், வங்கமொழி திரைப்பட நடிகர் ஹிரோன் சட்டர்ஜி வாக்களித்தார். 191 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த 30 தொகுதிகளிலும் 10 ஆயிரத்து 620 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் பாஜக பூத் ஏஜெண்டுகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் மிரட்டப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்காளத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.14 சதவீத வாக்குகளும், அசாமில் 10.51 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 27.45% வாக்குப்பதிவு மேற்கு வங்காளத்தில் 37.42% வாக்குப்பதிவாகி உள்ளது.
அசாமில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 12 மணி நிலவரப்படி 31.80 சதவிகித வாக்குப் பதிவாகி இருந்தன. மதியம் 1 மணி வரை 73.45 லட்சம் வாக்காளர்களில் 48.26 சதவீதம் பேர் 39 சட்டசபை தொகுதிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 30 இடங்களில் மதியம் 1 மணி வரை 58 சதவீதம் வாக்குகள்: பதிவாகி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் 3.30 மணி நிலவரப்படி 71.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 63.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
63.03% polling in Assam, 71.07% polling in West Bengal, till 3:31 pm: Election Commission of India pic.twitter.com/mTuy3pJXpK
— ANI (@ANI) April 1, 2021
Related Tags :
Next Story