பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விஷம் போன்றவர்கள்; தமிழகம், புதுச்சேரிக்குள் அனுமதிக்காதீர்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விஷம் போன்றவர்கள் என்றும் தமிழகம், புதுச்சேரிக்குள் அவர்களை அனுமதிக்காதீர் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ந்தேதி சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும். இதேபோன்று புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தலும் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதற்கான பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. விஷம் போன்றவர்கள்.
நீங்கள் அவர்களை சுவைத்தீர்கள் என்றால், மரணம் நிச்சயம். கர்நாடகத்தில் அவர்கள் எப்படியோ ஆட்சியை பிடித்து விட்டனர். ஆனால், விஷ கொள்கைகளை கொண்டவர்களை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story