மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் சுமார் ரூ.1¼ லட்சம் கோடி


மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் சுமார் ரூ.1¼ லட்சம் கோடி
x
தினத்தந்தி 2 April 2021 1:22 AM IST (Updated: 2 April 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1¼ லட்சம் கோடியை நெருங்கியது. ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனதில் இருந்து இதுதான் அதிகமான வசூலாகும்.

வசூல் விவரம்

மாதந்தோறும் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.கடந்த மார்ச் மாத வசூல் விவரத்தை நேற்று வெளியிட்டது. அதன்படி, மார்ச் மாதத்தில், ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 902 கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.இதில், மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.22 ஆயிரத்து 973 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.29 ஆயிரத்து 329 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.62 ஆயிரத்து 842 கோடியாகவும், செஸ் வரி ரூ.8 ஆயிரத்து 757 கோடியாகவும் உள்ளது.

பொருளாதாரம் மீள்கிறது

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனது. அப்போது முதல் கிடைத்து வரும் ஜி.எஸ்.டி. வருவாயில் இதுதான் அதிகம் ஆகும். மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலுடன் ஒப்பிடுகையில், இது 27 சதவீதம் அதிகம்.கடந்த 5 மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை இது உணர்த்துவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. அத்துடன், போலி ரசீதுகளுக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள், பல்வேறு துறைகள் மூலம் கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்தல், திறமையான வரி நிர்வாகம் ஆகியவையே ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரிப்புக்கு காரணங்கள் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story