“தேர்தல் ஆதாயத்துக்காக விருது கொடுப்பது சரியல்ல” - ராஜீவ் சுக்லா குற்றச்சாட்டு
தேர்தல் ஆதாயத்துக்காக நடிகர் ரஜினிகாந்துக்கு விருது கொடுப்பது சரியல்ல என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
ரஜினிகாந்த், மிகப்பெரிய நடிகர். வெற்றிகரமான நடிகர். அவரை எல்லோரும் மதிக்கிறோம். நீண்ட காலத்துக்கு முன்பே அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும். இப்போது கொடுப்பது ஏன்?
பா.ஜனதா எல்லாவற்றையும் ஓட்டு கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. ஓட்டு அடிப்படையிலேயே ஒவ்வொரு காரியத்தையும் செய்யக்கூடாது. தேர்தலை மனதில் கொண்டு ஆதாயம் பெறுவதற்காக இதை செய்வது சரியல்ல. பிரபலங்களை இதுபோன்ற தேவையற்ற அரசியல் சர்ச்சையில் இழுத்து விடுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story