ஆபாச வீடியோ விவகாரம்; இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெலகாவியில் இருந்து விஜயாப்புராவில் குடியேறினர்


ஆபாச வீடியோ விவகாரம்; இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெலகாவியில் இருந்து விஜயாப்புராவில் குடியேறினர்
x
தினத்தந்தி 2 April 2021 3:09 AM IST (Updated: 2 April 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ விவகார இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெலகாவியில் இருந்து வெளியேறி விஜயாப்புராவில் குடியேறினர்.

விஜயாப்புரா: ஆபாச வீடியோ விவகார இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெலகாவியில் இருந்து வெளியேறி விஜயாப்புராவில் குடியேறினர். 

டி.கே.சிவக்குமார் மீது குற்றச்சாட்டு

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியுடன் ஆபாச வீடியோவில் இருந்ததாக கூறப்படும் இளம்பெண், நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் தற்போது சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இளம்பெண் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரமேஷ் ஜார்கிகோளியால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறார். இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெலகாவியில் வசித்து வந்தனர்.

இதற்கிடையே டி.கே.சிவக்குமார் அரசியல் ஆதாயத்திற்காக தங்கள் மகளை கடத்தி வைத்திருப்பதாக இளம்பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தனர். சமீபத்தில் கூட இளம்பெண்ணுக்கு மனஆலோசனை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை கூறி இருந்தார்.

விஜயாப்புராவில் குடியேறினர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக இளம்பெண்ணின் குடும்பத்தினரை பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீசார், விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்திக்கு அனுப்பி வைத்தனர். நிடகுந்தியில் உள்ள வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரத்தால் தான் இளம்பெண்ணின் குடும்பத்தினரை வேறு ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்ததாகவும், அதனால் அவர்கள் பெலகாவியைவிட்டு வெளியேறி நிடகுந்தியில் குடியேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

உரிய பாதுகாப்பு

இதுகுறித்து நேற்று காலை இளம்பெண்ணின் தந்தை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
நிடகுந்தியில் எனது மாமியார் வீடு உள்ளது. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரை கவனித்து கொள்வதற்காக இங்கு வந்து உள்ளோம். பெலகாவியில் இருந்து நிடகுந்திக்கு எங்களை ஏ.பி.எம்.சி. போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 

 மேலும் நிடகுந்தி போலீசாரும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். நாங்கள் இங்கு வர யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. ஆபாச வீடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் சிறப்பு விசாரணை குழு போலீசாரே நல்ல முறையில் விசாாித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story