வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை இல்லை
வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை இல்லை என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
பெங்களூரு: வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை இல்லை என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
கொரோனா பரிசோதனை
நாட்டில் கொரோனா 2வது அலை வீசத்தொடங்கியுள்ளது. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை அடைந்துள்ளது. இதனால் மராட்டியம், கேரளா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள், கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
அதனால் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள், 1-ந் தேதி (நேற்று) முதல் கட்டாயம் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
கொரோனா பரிசோதனை
ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது மிக கடினம் என்று உணர்ந்ததை அடுத்து அரசு அந்த முடிவை கைவிட்டுள்ளது. அதனால் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர தேவை இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா கூறினார்.
Related Tags :
Next Story