பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை; அரசு அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து கர்நாடக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனோ வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விடுமுறையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். இதில் பெங்களூருவில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை(அதாவது இன்று) முதல் விடுமுறை விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும். தேர்வுகள் குறித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story