டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : அவசர ஆலோசனைக்கு கெஜ்ரிவால் அழைப்பு


டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : அவசர ஆலோசனைக்கு கெஜ்ரிவால் அழைப்பு
x
தினத்தந்தி 2 April 2021 8:56 AM IST (Updated: 2 April 2021 8:56 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

புது டெல்லி,

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால், சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியிலும் சமீப காலமாக தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன் தினம் 1819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

நேற்று இந்த ஆண்டில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 2790 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. முந்தைய நாள் பாதிப்பை விட 53 சதவீதம் இது அதிகமாகும். 

டெல்லியில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து இருப்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று  மாலை 4 மணிக்கு முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி, அதிகரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 


Next Story