மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய அய்யப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள் - பிரதமர் மோடி
மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய அய்யப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள் என திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
திருவனந்தபுரம்,
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.
இந்தநிலையில், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். மற்றும் திருவனந்தபுரத்தில் பதானம்திட்டாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
எல்.டி.எஃப் அரசு என்ன செய்தது? முதலில், அவர்கள் கேரளாவின் உருவத்தை சிதைக்க முயன்றனர், பின்னர் அவர்கள் தங்கள் முகவர்கள் மூலம் புனித தளங்களை அழித்தனர்.
மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய அய்யப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள். சிறு பிள்ளைத்தனமான செயல்களால் புனிதத்தலங்களில் உறுதியை எல்.டி.எஃப் அரசு குலைக்கிறது.
அவர்கள் (எல்.டி.எஃப் & யு.டி.எஃப்) வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார்கள், இரு கூட்டணிகளிலும் வாரிசு ஆட்சிக்கு ஒரு வெறி உள்ளது, மற்ற அனைத்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளன, ஒரு உயர்மட்ட எல்.டி.எஃப் தலைவரின் மகனின் வழக்கு நன்கு அறிவீர்கள் மேலும் இதை பற்றி விவரிக்க நான் விரும்பவில்லை.
படித்தவர்களை அரசியலுக்குள் கொண்டுவருவதை பாஜக விரும்புகிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள். 'மெட்ரோமேன்' ஈ.ஸ்ரீதரனின் செயலில் இருப்பது அதைப் பற்றி கூறுகிறது. அவர் எவ்வளவு பங்களிப்பு செய்துள்ளார், இப்போது அவர் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான வழிமுறையாக பாஜகவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story