நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் நந்திகிராம் வாக்குச்சாவடிக்கு ஏன் சென்றேன்?: மம்தா விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாக்குச்சாவடியினுள் ஏன் சென்றேன் என்பது குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
கொல்கத்தா,
நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவின்போது, திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதிக்கொண்டனர். வாக்குச்சாவடிகளுக்கு மம்தா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறை தொடர்பாக நிர்வாகத்திடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பலகதா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
''நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருப்பதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தேன்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் கைத்துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். அவர்கள் பிற மொழிகளைப் பேசினர். அவர்கள் பாஜக கட்சியைச் சேர்ந்த பிற மாநிலக் குண்டர்களாக இருப்பார்கள்.
வாக்குச்சாவடியில் உள்ளூர் மக்களை அனுமதிக்காகது குறித்து ஆளுநரிடம் புகாரளித்தேன். விரைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்' என்று கூறினார்.
Related Tags :
Next Story