இந்தியாவில் மிகவும் அதிகமாக ஒரே நாளில் 36.70 லட்சம் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை
இ்ந்தியாவில் மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 36.70 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கு என பல கட்டங்களாக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் ஓய்வின்றி நடைபெற்று வரும் இந்த திட்டத்தின் கீழ் தினமும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். உலக அளவில் மிகப்பெரிய திட்டமாக அமல்படுத்தப்பட்டு வரும் இந்த தடுப்பூசி பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
ஒரே நாளில் 37,71,242 டோஸ்கள்அதுவும் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதால், அதிகப்படியான மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் வகையில் இந்த பணிகள் இன்னும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இதன் பயனாக ஒருநாளில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியிருக்கிறது. அந்தவகையில் நேற்று காலை 7 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 36 லட்சத்து 71 ஆயிரத்து 242 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
6.87 கோடி டோஸ்கள்இதில் 33,65,597 பயனாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மீதமுள்ள 3,05,645 பேர் 2-வது டோஸ் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 6.87 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இதில் சுகாதார பணியாளர்கள் 83,06,269 பேர் முதல் டோசும், 52,84,564 பேர் 2-வது டோசும் போட்டுள்ளனர். முன்கள பணியாளர்கள் 93,53,021 பேர் முதல் டோசும், 40,97,634 பேர் 2-வது டோசும் போட்டுள்ளனர்.
8 மாநிலங்கள்இதைப்போல 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3,17,05,893 பேர் முதல் டோசும், 2,18,741 பேர் 2-வது டோசும் போட்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்கள் 97,83,615 பேர் முதல் ேடாசும், 39,401 பேர் 2-வது டோசும் போட்டு இருக்கிறார்கள்.
மொத்த தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில் 59.68 சதவீத டோஸ்கள் 8 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன. அவை மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகும்.
இந்த தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.